தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, போலீஸ் ஒருவர் உயிரிழப்பு + "||" + Cop Killed In Action, 3 Terrorists Shot Dead In Overnight Encounter In Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, போலீஸ் ஒருவர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை,  போலீஸ் ஒருவர்  உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவு நடைபெற்ற என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பந்தா சவுக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிஆர்பிஎப் வீரர்களுடன் சேர்ந்து போலீசார் நேற்று இரவு அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரைக் கண்டதும் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில்  போலீசார் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 3 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அப்பகுதியில் மேலும், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த பாகிஸ்தான் சதி முறியடிப்பு
பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த பாகிஸ்தான் சதி முறியடிப்பு
2. ஜம்மு காஷ்மீர்; என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது
3. ஜம்மு-காஷ்மீரில் அமையவுள்ள உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம்
காஷ்மீரின் ரியா மாவட்டத்தில் உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.
4. முத்துப்பேட்டையில், விநாயகர் சிலைகள் கரைப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
முத்துப்பேட்டையில், விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
5. ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.