தேசிய செய்திகள்

44 -ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + August set for highest rain surplus in 44 years

44 -ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

44 -ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் சராசரியை விட அதிகமாக பெய்துள்ளது.
புதுடெல்லி,

தென்மேற்கு பருவ மழை கடந்த மாதம்(ஜூலை) 10 சதவிகிதம் வழக்கத்தை விட குறைவாக பெய்தது. ஆனால், நடப்பு ஆகஸ்ட் மாதம் 25 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் தென் இந்திய பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவாக நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்,  25 சதவிகிதம் கூடுதலாக  பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “  நாடு முழுவதும் இந்த ஆண்டு தற்போது வரை  296.2 மி.மீட்டர்  மழை பதிவாகியுள்ளது. சராசரியாக  237.2  மி.மீட்டர் எனற அளவே ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை பதிவாகும். 

மத்திய இந்தியாவில் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பொழிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 57 சதவிகிதம் கூடுதலாக ம்ழை பெய்துள்ளது. தென் இந்தியாவிலும் 42 சதவிகிதம் கூடுதலாக நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்துள்ளது. 

எனினும், செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட குறைவாகவே மழை இருக்கும். வடகிழக்கு இந்திய பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் போதிய அளவு மழை பெய்யவில்லை. வரும் 5 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு மாநிலங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது இதனால், அங்கு வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது” என்று தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. லடாக் மலை முகடுகளை இந்தியா மீட்டெடுத்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
லடாக் மலை முகடுகளை ஆபரேஷன் பனி சிறுத்தை என்ற அதிரடி நடவடிக்கை மூலம் இந்தியா மீட்டெடுத்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
2. ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் - இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
3. சீனாவை வீழ்த்தி ஐ.நா. பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு
சீனாவை வீழ்த்தி ஐநா சபையின் ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலைமை ஆணையகத்தின் உறுப்பினராக, இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
4. இந்தியாவில் 50 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு; மாநில வாரியாக பாதிப்பு விவரம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை நெருங்குகிறது; மாநில வாரியாக பாதிப்பு விவரம் வருமாறு:-
5. ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்பட 10 ஆயிரம் இந்தியர்களை சீனா உளவு பார்த்ததா?
இந்தியாவுடன் சமீப காலமாக அதிக மோதல் போக்கை சீனா கையாண்டு வருகிறது.