தேசிய செய்திகள்

கொரோனா விதிமுறைகளை மீறியதால் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பா.ஜ.க. எம்.பி. + "||" + Jharkhand: BJP MP Sakshi Maharaj put in 14-day quarantine for violating Covid-19 norms

கொரோனா விதிமுறைகளை மீறியதால் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பா.ஜ.க. எம்.பி.

கொரோனா விதிமுறைகளை மீறியதால்  14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பா.ஜ.க. எம்.பி.
கொரோனா விதிமுறைகளை மீறியதால் பாஜக எம்.பி 14 தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
லக்னோ,

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சாக்சி மகராஜ்,  சர்ச்சைக்குரிய கருத்தால் அடிக்கடி செய்திகளில் வலம் வரும்  ஷாக்சி மகராஜ் இம்முறை கொரோனா விதிகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, கொரோனா விதிகளை பொருட்படுத்தாமல அனுமதியின்றி ஜார்க்கண்ட மாநிலத்தில் நுழைந்ததை அடுத்து 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். 

கிரிடிக் மாவட்டத்தில் உள்ள சாந்திபவன் ஆசிரமத்தில் தனது தாயை பார்க்க வந்த நிலையில், அதற்கு அவர் விண்ணப்பிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை 14 நாள் தனிமைப்படுத்த அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விலக்கு கோரி பா.ஜ.க. விண்ணப்பித்தால், அந்த மனு பரிசீலிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.