மாநில செய்திகள்

மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது + "||" + Vasanthakumar MP's body was laid to rest in his hometown near the mother-father memorial.

மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது

மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் உடல் அவரது சொந்த ஊரில்  நல்லடக்கம் செய்யப்பட்டது
வசந்தகுமார் எம்.பி உடல் சொந்த ஊரில், தாய் - தந்தை நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அகஸ்தீஸ்வரம்,

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் கடந்த 10-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 

அவரது உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்தது. இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. மேலும், அவர் நிமோனியா தொற்றாலும் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எச்.வசந்தகுமார் நேற்று முன்தினம் மாலை உயிர் இழந்தார்.

எச்.வசந்தகுமார் உயிர் இழந்த அன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. அந்த பரிசோதனையில் எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று முடிவு வந்தது. இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. சென்னை தி.நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது  இல்லத்தில் வசந்த குமார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

எச்.வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் எடுத்து செல்லப்பட்டது. நள்ளிரவு கொண்டு  அகஸ்தீஸ்வரம் கொண்டு வரப்பட்ட வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர். 

இதையடுத்து, இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.  தொடர்ந்து, வசந்தகுமார் எம்.பி உடல் இறுதி ஊர்வலம்  நடைபெற்றது.  இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்  செல்லப்பட்ட வசந்தகுமார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. கண்ணாடி அணிந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு-விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2. ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாக ‘மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும்’-காங்கிரஸ் ஆவேசம்
ஊரடங்கை அறிவிப்பதற்கு முன் மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ் ஆவேசமாக கூறியது.
3. அசாமில் மேலும் 2,394- பேருக்கு கொரோனா தொற்று
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,394-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று
மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 324 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 324 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.