தேசிய செய்திகள்

நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரை + "||" + The zest of Onam today has reached distant shores of foreign lands. Be it America, Europe or Gulf countries, the verve of Onam can be felt everywhere. Onam is increasingly turning out to be an international festival: PM Modi

நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரை

நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரை
நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேசினார்.
புதுடெல்லி,

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற  பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:

இயற்கையை காப்பதற்காகவே திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் பொறுமை, எளிமை காணப்படுகிறது.  பண்டிகை காலத்தில் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும. கொரோனா அச்சுறுத்தல் காலம் இது 5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது 
உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம்.  கடந்த காலத்தை நினைவூட்டுவதும் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள்

உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்குவிக்க வேண்டும்.  இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் ஒற்றுமையை பறை சாற்றுகிறது, குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடும் போது ஒற்றுமை வளர்கிறது. இந்த முயற்சி நல்ல கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்கு அல்ல. தேசிய கல்விக் கொள்கையில் கூட இதுபற்றி விவரிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் பேசினார். 


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி பிறந்த நாள் விழா
தென்காசி மாவட்டத்தில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
2. பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
3. பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. மோடியைப் போன்ற ஒரு பிரதமரை பெறுவது நாம் செய்த அதிர்ஷ்டம் - நடிகை கங்கனா ரனாவத்
மோடியைப் போன்ற ஒரு பிரதமரை பெறுவது நாட்டுமக்கள் செய்த அதிர்ஷ்டம் என பாலிவுட் நடிகை கங்கனா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. இன்று 70-வது பிறந்த நாள்: ‘தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அரசியலுக்கு வந்தவர் மோடி’- ஸ்மிரிதி இரானி புகழாரம்
தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அரசியலுக்கு வந்தவர் மோடி என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி புகழாரம் சூட்டியுள்ளார்.