தேசிய செய்திகள்

சீனா, பாக்.உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவ பயிற்சியை புறக்கணிக்க இந்தியா முடிவு + "||" + India Pulls Out Of Russia Military Exercise With China, Pak Over Covid

சீனா, பாக்.உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவ பயிற்சியை புறக்கணிக்க இந்தியா முடிவு

சீனா, பாக்.உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவ பயிற்சியை புறக்கணிக்க இந்தியா முடிவு
ரஷியாவில் அடுத்த மாதம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவப் பயிற்சியைப் புறக்கணிப்பதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது.
புதுடெல்லி,

ரஷியாவின் அஸ்ட்ராகான் நகரில், செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறவுள்ளது. அதில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 20 நாடுகள் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்க இந்தியா முடிவு செய்திருந்தது.  இந்த நிலையில், இந்த போர்ப் பயிற்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை வெளியிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சகம், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அடுத்தடுத்த தொடர்ச்சியான கடின சூழலால்  பங்கேற்க முடியாத சூழல் இருப்பதாக் தெரிவித்துள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு, ரஷியாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வாரம் ரஷியா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93,337 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 96,424 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 96,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் இதுவரை 6.15 கோடி மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்
இந்தியாவில் இதுவரை 6.15 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 51,18,254 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 51,18,254 ஆக உயர்ந்துள்ளது.
5. லடாக் மலை முகடுகளை இந்தியா மீட்டெடுத்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
லடாக் மலை முகடுகளை ஆபரேஷன் பனி சிறுத்தை என்ற அதிரடி நடவடிக்கை மூலம் இந்தியா மீட்டெடுத்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.