தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்; இந்திய ராணுவ அதிகாரி வீரமரணம் + "||" + Pakistani army attacks Kashmir; Martyrdom of an Indian Army officer

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்; இந்திய ராணுவ அதிகாரி வீரமரணம்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்; இந்திய ராணுவ அதிகாரி வீரமரணம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ராஜ்வீந்தர் சிங் வீரமரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா என்ற இடத்தில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் நாட்டு ராணுவம் இந்திய நிலைகளை நோக்கி போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி முன்னறிவிப்பின்றி தாக்குதலில் ஈடுபட்டது.

இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரியான ராஜ்வீந்தர் சிங் படுகாயமடைந்து உள்ளார்.  உடனடியாக அவர் அங்கிருந்து சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  எனினும் அவர் வீரமரணம் அடைந்துள்ளார்.  இதனை இந்திய ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி தேவேந்தர் ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு எதிரான போர்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா படுகுழியில் விழுந்து உள்ளது என மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
2. கங்கனாவுக்கு விஷால் ஆதரவு
நடிகை கங்கனா ரணாவத்துக்கு விஷால் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
3. அரசு பள்ளி மாணவர்களுக்கு டிசம்பருக்குள் ஷூ, சாக்ஸ் வழங்கப்படும்; அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் டிசம்பருக்குள் ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
4. நாட்டில் 1.93 சதவீதத்தினரே ஐ.சி.யூ.வில் உள்ளனர்; மத்திய மந்திரி ஹர்ச வர்தன்
நாட்டில் 1.93 சதவீதத்தினரே ஐ.சி.யூ.வில் உள்ளனர் என மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் தெரிவித்து உள்ளார்.
5. காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து உள்ளார்.