உலக செய்திகள்

சீனாவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈரடுக்கு விடுதி இடிந்து விழுந்தது; 29 பேர் பலி + "||" + The twin hotels collapsed during a birthday celebration in China; 29 people were killed

சீனாவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈரடுக்கு விடுதி இடிந்து விழுந்தது; 29 பேர் பலி

சீனாவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈரடுக்கு விடுதி இடிந்து விழுந்தது; 29 பேர் பலி
சீனாவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்பொழுது ஈரடுக்கு விடுதி ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 29 பேர் பலியாகினர்.
பீஜிங்,

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து தென்மேற்கே 400 மைல்கள் தொலைவில் ஷான்க்சி மாகாணம் அமைந்துள்ளது.  இங்குள்ள லின்பென் என்ற நகரில் உள்ள இரண்டடுக்கு விடுதி ஒன்றிற்கு சிலர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட சென்றுள்ளனர்.

இந்நிலையில், விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.  இதில் சிக்கி கொண்டவர்களில் 29 பேர் பலியாகி உள்ளனர்.  இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்காக 100க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் சென்றுள்ளனர்.  இயந்திரங்கள் மற்றும் பயிற்சி பெற்ற நாய்களும் மீட்பு பணியில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த சம்பவத்தில் 28 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  57 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர் என சீன அவசரநிலை மேலாண் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை.  இந்த விபத்து பற்றி அரசின் மாநில கவுன்சில் தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது.