தேசிய செய்திகள்

மாணவர்கள், தேர்வு குறித்து ஆலோசிக்க விரும்புகின்றனர், பிரதமர் பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார் - ராகுல்காந்தி விமர்சனம் + "||" + JEE-NEET aspirants wanted the PM do Pariksha Pe Charcha but the PM did Khilone Pe Charcha Rahul Gandhi

மாணவர்கள், தேர்வு குறித்து ஆலோசிக்க விரும்புகின்றனர், பிரதமர் பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார் - ராகுல்காந்தி விமர்சனம்

மாணவர்கள், தேர்வு குறித்து ஆலோசிக்க விரும்புகின்றனர், பிரதமர் பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார் - ராகுல்காந்தி விமர்சனம்
நீட் ஜேஇஇ தேர்வு குறித்து ஆலோசிக்க மாணவர்கள் விரும்புகின்றனர். ஆனால்,பொம்மை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்குவதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,

மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது. தமிழகத்தில் பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது. கடந்த காலத்தை நினைவூட்டுவதும், எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள். இந்தியாவில் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருட்கள் ஒற்றுமையை பறைசாற்றுகிறது.


விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்வி கொள்கையில் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய வேண்டும். உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்கவிக்க வேண்டும் என பேசினார்.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜேஇஇ - நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வு குறித்து ஆலோசிக்க விரும்புகின்றனர். ஆனால், பிரதமர் பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மயில்களுடன் பிஸி நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் - ராகுல்காந்தி கிண்டல்
மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
2. கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்கட்சி வரிசையில் தான் அமரும் -காங்கிரஸ் மூத்த தலைவர்
கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு கட்சி எதிர்கட்சி வரிசையில் தான் அமரும் என மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார்.
3. 2024 இல் வெற்றி பெற ராகுல் காந்தி காங்கிரசை வழிநடத்த முடியாது -கடிதம் எழுதியவர்களில் ஒருவர்
ராகுல் காந்தி கட்சியை வழிநடத்தவும், 2024 இல் 400 இடங்களைப் பெறவும் எங்களுக்கு உதவ முடியாது என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் ஒருவர் கூறி உள்ளார்.
4. 4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழப்பு - ராகுல்காந்தி டுவீட்
4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
5. ராஜஸ்தான் காங். உள்கட்சி பூசலில் ‘திடீர்’ சமரசம்: முதல்-மந்திரி மாற்றப்படுவாரா?
ராஜஸ்தான் காங்கிரஸ் உள்கட்சி பூசலில் சமரசம் உருவாகி உள்ளது. ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரை அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் சந்தித்து பேசினார். முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? என்பது பற்றி காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.