உலக செய்திகள்

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் பலி + "||" + Unprecedented heavy rains kill 36 in Pakistan

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் பலி

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
கராச்சி,

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றுகளால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்.  கடந்த பிப்ரவரியில் அந்நாட்டில் முதல் பாதிப்பு அறியப்பட்ட பின்னர் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இது தவிர்த்து ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் ஏற்படும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளிலும் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர்.  அந்நாட்டின் கராச்சி நகரில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  

கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்தவர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தெருக்கள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  அதில் சிக்கிய மக்களை மீட்க படகுகளை அதிகாரிகள் பயன்படுத்தி உள்ளனர்.  கராச்சியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதேபோன்று வடமேற்கு மாகாணம் கைபர் பக்துன்குவாவில் கடும் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகி உள்ளனர்.

கனமழையால் மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன.  இதனால், 1.5 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.  போதிய உதவி செய்யவில்லை என கூறி குடியிருப்புவாசிகள் பலர் அதிகாரிகள் மீது ஆத்திரத்தில் உள்ளனர்.  அந்நாட்டில், கடந்த ஜூன் முதல் மழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 136 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மே.வங்கம், ஒடிசா, ஜார்க்கண்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம்
மே.வங்கம், ஒடிசா, ஜார்க்கண்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. கனமழை: வடகர்நாடகத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன சாலைகள், பாலங்கள் மூழ்கின-போக்குவரத்து துண்டிப்பு
வடகர்நாடகத்தில் இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
3. மிக கனமழை பெய்யும் புனே, சத்தாராவுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ மும்பையிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு
புனே, சத்தாராவில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டு உள்ளது. மும்பையிலும் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4. கனமழைக்கு 74 வீடுகள் சேதம்: முகாம்களில் 1,000 பேர் தங்க வைப்பு
நீலகிரியில் கனமழைக்கு 74 வீடுகள் சேதம் அடைந்தன. நிவாரண முகாம்களில் 1,000 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
5. அசாமில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்வு
அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.