சினிமா செய்திகள்

6 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள சாட்விக் போஸ்மனின் டுவீட்: ராஜாவுக்கு ஏற்ற அஞ்சலி என டுவீட் புகழாரம் + "||" + "Black Panther" male protagonist Bosman died of illness, the last tweet has a record number of likes

6 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள சாட்விக் போஸ்மனின் டுவீட்: ராஜாவுக்கு ஏற்ற அஞ்சலி என டுவீட் புகழாரம்

6 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள சாட்விக் போஸ்மனின் டுவீட்: ராஜாவுக்கு ஏற்ற அஞ்சலி என டுவீட் புகழாரம்
6 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள சாட்விக் போஸ்மனின் டுவீட், ராஜாவுக்கு ஏற்ற அஞ்சலி என டுவீட் புகழாரம் சூட்டியுள்ளது.
நியூயார்க்,

பிளாக் பந்தர் படத்தில் நடித்து உலகளவில் பிரபலமடைந்தவர், நடிகர் சாட்விக் போஸ்மன். இவர், கடந்த 4 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார். இது அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, உலகளவில் உள்ள மார்வல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.


அவர் உயிரிழந்தது தொடர்பாக அவரின் குடும்பத்தினர் அவரின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில், சாட்விக் போஸ்மன் உயிரிழந்துவிட்டார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு மூன்றாம் நிலை பெருங்குடல் புற்றுநோய் இருப்பது 2016- ல் கண்டறியப்பட்டது. நான்கு வருடங்களாக அவர் அதனுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், அது நான்காம் நிலைக்கு சென்றது எனவும், அவரின் வீட்டிலே மனைவி மற்றும் குடும்பத்தினர் அருகில் இருக்க அவர், இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த டுவீட் தற்பொழுது 6 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. அதிக லைக்குகளையும், ரீடுவீட்களையும் பெற தொடங்கிய நிலையில், அந்த பதிவு குறித்து இது டுவிட்டர் நிர்வாகம், அதிக லைக் பெற்ற டுவீட் எனவும், ஒரு ராஜாவுக்கு ஏற்ற அஞ்சலி இது தான் என #WakandaForever என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டுள்ளது.