மாநில செய்திகள்

விரைவில் என்னைப் பற்றி புத்தகம் வெளியிடுகிறேன் - பாஜக துணை தலைவர் அண்ணாமலை பரபரப்பு டுவீட் + "||" + my whole life story will be in detail in my book which will be published shortly K.Annamalai

விரைவில் என்னைப் பற்றி புத்தகம் வெளியிடுகிறேன் - பாஜக துணை தலைவர் அண்ணாமலை பரபரப்பு டுவீட்

விரைவில் என்னைப் பற்றி புத்தகம் வெளியிடுகிறேன் - பாஜக துணை தலைவர் அண்ணாமலை பரபரப்பு டுவீட்
என்னை பற்றி நூல் வெளியிடுகிறேன், எல்லாவற்றையும் அதில் தெரிந்து கொள்ளுங்கள் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தமிழக பா.ஜ.க. துணை தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியில் சேர்ந்த 5-வது நாளிலேயே அவருக்கு முக்கிய பதவி கிடைத்துள்ளது.

இந்நிலையில், விரைவில் என்னைப் பற்றி புத்தகம் வெளியிடுகிறேன் என்று பாஜக துணை தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதுதான் ஐபிஎஸ் தேர்வில் வெற்று பெற்று பொறுப்புக்கு வந்தேன்.

கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத ஆட்சியின் கீழ்தான் பணியற்றினேன். பாஜக ஆட்சியின் கீழ் 4 நாட்கள்தான் பணியாற்றினேன். எனது கடந்தகால சாதனைகளைப்பற்றி நான் பேசவில்லை எனினும், அது குறித்து வரும் தகவல்களைப்பற்றி சொல்ல விரைவில் எனது வாழ்க்கை புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...