தேசிய செய்திகள்

கொரோனாவால் 87 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பாதிப்பு; இந்திய மருத்துவ சங்கம் தகவல் + "||" + 87,000 health workers affected by corona; Indian Medical Association Information

கொரோனாவால் 87 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பாதிப்பு; இந்திய மருத்துவ சங்கம் தகவல்

கொரோனாவால் 87 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பாதிப்பு; இந்திய மருத்துவ சங்கம் தகவல்
நாட்டில் கொரோனா தொற்றுகளால் 87 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வருகின்றன.  இதனை தடுக்க அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது.  எனினும், நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை குணமடைய செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ள மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்களும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இதுபற்றி இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அதில், இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.  

அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுகளால் 87 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  573 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதனால், அவர்களுக்கு தேசிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருநங்கைகளுக்கு கல்வி தகுதிக்கேற்ப வேலை வழங்க ஏற்பாடு போலீஸ் சூப்பிரண்டு தகவல்
திருநங்கைகளுக்கு கல்வி தகுதிக்கேற்ப வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறினார்.
2. குமரியில் 9 அதிகாரிகளுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் 9 அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
3. மழையின் போது நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணிக்க குழு கலெக்டர் ராமன் தகவல்
மழையின்போது நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
4. திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 87 ஆயிரம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கலெக்டர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 713 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் ஆனந்த் கூறினார்.
5. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை புதுவை கலெக்டர் அருண் தகவல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுவை கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.