தேசிய செய்திகள்

100 நாட்களில் 100 திட்டங்கள்; கேரள மக்களுக்கு ஓணம் பரிசு: முதல் மந்திரி அறிவிப்பு + "||" + 100 projects in 100 days; Onam gift to the people of Kerala: CM announcement

100 நாட்களில் 100 திட்டங்கள்; கேரள மக்களுக்கு ஓணம் பரிசு: முதல் மந்திரி அறிவிப்பு

100 நாட்களில் 100 திட்டங்கள்; கேரள மக்களுக்கு ஓணம் பரிசு:  முதல் மந்திரி அறிவிப்பு
கேரள மக்களுக்கு ஓணம் பரிசாக 100 நாட்களில் 100 திட்டங்கள் நிறைவேற்றப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
திருவனந்தபுரம்,

கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்பட உள்ளது.  எனினும், கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறாமல் இருக்கும்படி அரசு வலியுறுத்தி உள்ளது.  இதனால், முன்புபோல் மக்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதேபோன்று ஓணம் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனையும் மந்தம் ஆக உள்ளது.  இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், கேரளாவின் சமூக பொருளாதார நிலையை ஊக்குவிக்கும் வகையில் மாநிலத்தில் 100 திட்டங்கள் அடுத்த 100 நாட்களில் நிறைவேற்றி முடிக்கப்படும்.  இது கேரள மக்களுக்கு அரசின் ஓணம் பரிசாகும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு; மத்திய ரெயில்வே மந்திரி அறிவிப்பு
தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மக்களவையில் அறிவித்து உள்ளார்.
2. டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும்; மாநில கல்வி இயக்குனரகம் அறிவிப்பு
டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
3. பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமைகளுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
4. விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை; சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு
விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
5. தேதி மாற்றம்: ஜனவரி 20-ந்தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு; தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தமிழகத்தில் ஜனவரி 15-ந்தேதிக்குப் பதிலாக, 20-ந்தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.