தேசிய செய்திகள்

கல்வான் மோதலுக்கு பிறகு தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்ட இந்திய போர்க்கப்பல்! + "||" + Post-Galwan clash, Indian Navy quietly deployed warship in South China Sea

கல்வான் மோதலுக்கு பிறகு தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்ட இந்திய போர்க்கப்பல்!

கல்வான் மோதலுக்கு பிறகு தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்ட இந்திய போர்க்கப்பல்!
சீனாவின் எதிர்ப்பையும் மீறி தென்சீனக் கடலில் இந்தியா ஒரு போர்க்கப்பலை நிறுத்தியுள்ளது.
புதுடெல்லி,

கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15 ம் தேதி  ஏற்பட்ட வன்முறை மோதல்களில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதற்கு பின் இந்தியா சீனா இடையிலான பதற்றம் அதிகரித்துக் கொண்டே வந்தது. பின்னர் ஒரு கட்டத்தில், இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை கண்டு சீன படைகள் பின் வாங்கின. படைகளை விலக்கிக் கொள்வதாக சீன அரசு கூறி வரும் போதிலும், சீனா அதை செயலில் முழுமையாக காட்டவில்லை.


இந்நிலையில் சீனாவின் எதிர்ப்பையும் மீறி, இந்தியா தென் சீனக் கடலில் ஒரு போர்க்கப்பலை நிறுத்தியுள்ளது. சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகே உள்ள மலாக்கா நீரிணையிலும் இந்திய போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் மலாக்கா நீரிணையில், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் ஆளில்லா கருவிகள் மூலம் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் கடற்படை தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கடற்படை தனது மிக் -29 கே போர் விமானத்தை ஒரு முக்கியமான விமானப்படை தளத்தில் நிறுத்தியுள்ளது, அங்கு அவர்கள் நிலம் மற்றும் மலைப்பகுதிகளில் மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்பான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

1,245 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தின் கீழ் 10 கடற்படைக் கப்பலில் றிறுத்தப்படும் ஆளில்லா வான்வழி கண்காணிப்பு வாகனங்கள் வாங்குவது குறித்து கடற்படை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் ராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.