தேசிய செய்திகள்

மின்னணு முறை பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது; மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல் + "||" + Do not charge for Electronic mode transactions; Ministry of Finance

மின்னணு முறை பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது; மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்

மின்னணு முறை பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது; மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்
நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் மின்னணு முறை பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் உள்ள சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பண பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைகள் மற்றும் பணம் செலுத்துதலுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கின்றன என சில தகவல்கள் வெளியாகின.

இதனை தொடர்ந்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பொன்றை இன்று வெளியிட்டு உள்ளது.  அதில், நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் மின்னணு முறை பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது என தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டு ஜனவரி 1ந்தேதியில் இருந்து, மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும் பணம் செலுத்துதலுக்கு கட்டணம் விதிக்க கூடாது என மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ந்தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனை சுட்டி காட்டி, அறிவிப்பினை மீறும் செயல் என வாரியம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, நடப்பு ஆண்டு ஜனவரி 1ந்தேதியில் இருந்து அல்லது அதற்கு பின்னர் வசூலித்த கட்டண தொகையை வங்கிகள் உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும் என்றும் வருங்காலத்தில் நடைபெறும் மின்னணு முறை பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது என அறிக்கையில் தெரிவித்து உள்ளது.