கிரிக்கெட்

ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெறும் - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நம்பிக்கை + "||" + BCCI president Sourav Ganguly says, ‘I hope IPL 2020 will be conducted well’

ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெறும் - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நம்பிக்கை

ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெறும் - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நம்பிக்கை
ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பை,

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 13-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் அமீரகம் சென்றுள்ள நிலையில், இதில் சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதனால் ஐபிஎல் போட்டிக்கு சிக்கல் ஏற்பட வாய்புள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்து பிசிசிசஐ தலைவர் சவுரவ் கங்குலி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறேன். மிக நீண்ட தொடர் என்பதால், எல்லாம் சிறப்பாக செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறேன். வழக்கமான அட்டவணைப்படி நான் எனது வேலையை தெடங்கியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.