மாநில செய்திகள்

சென்னையில் கடந்த 7 நாட்களில் 10 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது + "||" + In the last 7 days in Chennai In 10 zones Corona increased vulnerability

சென்னையில் கடந்த 7 நாட்களில் 10 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது

சென்னையில் கடந்த 7 நாட்களில் 10 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது
சென்னையில் கடந்த 7 நாட்களில் 10 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 7 நாட்களில் 10 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது எனவும், 4 மண்டலங்களில் பாதிப்பு குறைந்துள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

ஆலந்தூர் மண்டலத்தில் 4.7 சதவீதம், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4.3 சதவீதம், திருவொற்றியூர் மண்டலத்தில் 3.8 சதவீதம், ராயபுரம் மண்டலத்தில் 3.6 சதவீதம், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2.1 சதவீதம் கொரோனா பாதிப்பு கடந்த 7 நாட்களில் அதிகரித்துள்ளது. மேலும் திரு.வி.க நகர் மண்டலத்தில் 1.4 சதவீதம், அடையாறு மண்டலத்தில் 1.2 சதவீதம், அண்ணாநகர் மண்டத்தில் 0.7 சதவீதம், மாதவரம் மண்டலத்தில் 0.6 சதவீதம், கோடம்பாக்கம் மண்டலத்தில் 0.1 சதவீதமும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதேபோல் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 0.4 சதவீதம், பெருங்குடி மண்டலத்தில் 0.8 சதவீதம், மணலி மண்டலத்தில் 1.7 சதவீதம், வளசரவாக்கம் மண்டலத்தில் 2.7 சதவீதமும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அம்பத்தூர் மண்டலத்தில் கடந்த 7 நாட்களில் ஒரு பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் கமிஷனர் பெயரில் போலி முகநூல் கணக்கு-சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்
போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பெயரிலேயே போலியான முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது
2. சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம்: மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம்
சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
3. வேலை செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறிய பள்ளி மாணவி-3 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்
பல இடங்களில் தேடியும் மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர்.
4. உடல் வெப்பம் அதிகமாக இருந்ததால ‘என்னை ½ மணி நேரம் மட்டும் தேர்வு எழுத அனுமதித்தனர்- வியாசர்பாடி மாணவி குற்றச்சாட்டு
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் நிவேதிதா (வயது 18). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதினார்.
5. சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்தது
சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...