தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரஷாந்த் பூஷணுக்கு தண்டனை என்ன? உச்ச நீதிமன்றம் இன்று அறிவிப்பு + "||" + In Prashant Bhushan Contempt Case, Top Court Sentencing Today

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரஷாந்த் பூஷணுக்கு தண்டனை என்ன? உச்ச நீதிமன்றம் இன்று அறிவிப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரஷாந்த் பூஷணுக்கு தண்டனை என்ன? உச்ச நீதிமன்றம் இன்று அறிவிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பாப்டே மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாட்டை விமர்சித்து சமூக செயற்பாட்டாளரும் மற்றும் மூத்த வக்கீலுமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார். இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு மீண்டும் கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி பிரசாந்த் பூஷண் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.  இதனிடையே மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை குறித்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று  (ஆக.31-ம் தேதி) தண்டனையை  உச்சநீதிமன்றம் அறிவிக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
2. "கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும்"- மத்திய அரசு
கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
3. லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் - இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது
லடாக் எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
4. மன்னிப்பு கோர முடியாது; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோர பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
5. நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
நீட், ஜேஇஇ தேர்வுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் திட்டமிட்ட படி நடைபெறும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.