தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் நிறுவன வழக்கை இன்று விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட் + "||" + Vedanta moves Supreme Court after Madras HC’s refusal to allow reopening of Sterlite Copper plant

ஸ்டெர்லைட் நிறுவன வழக்கை இன்று விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

ஸ்டெர்லைட் நிறுவன வழக்கை இன்று விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று கடந்த 18-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
புதுடெல்லி, 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம், துப்பாக்கி சூடு போன்றவற்றால் பெரும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆலையை மூடுமாறு தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று கடந்த 18-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனு மீது, நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில்  இன்று  (திங்கட்கிழமை) விசாரணை நடைபெறுவதாக சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தாவிட்டால் நாங்கள் செய்வோம் -சுப்ரீம் கோர்ட் அதிரடி
வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையென்றால் அதனை நாங்கள் செய்வோம் என்று என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
2. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
3. டெல்லி விவசாயிகள் போராட்டம்: பிரச்சினைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் -சுப்ரீம் கோர்ட் அறிவுரை
டெல்லி எல்லைகளில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் அவர்கள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வியை எழுப்பியது.
4. ஆயுர்வேத மருத்துவர்கள் கொரோனா மருந்துகளை பரிந்துரைக்கலாமா? சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஏகேபி சத்பாவனா ஹோமியோபதி மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு நேற்று அளித்தது.
5. புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட தடையில்லை: சுப்ரீம் கோர்ட்
வரும் 10-ம் தேதி புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோரட் இன்று அனுமதியளித்தது.