மாநில செய்திகள்

20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு + "||" + At 20 customs posts Fare hike from tomorrow

20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு

20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு
20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்
சென்னை,

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. 

இவற்றில் ஓமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி (சேலம்), புதூர் பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), சமயபுரம் (திருச்சி), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), விஜயமங்கலம் (குமாரபாளையம்), பாளையம் (தர்மபுரி), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மொராட்டாண்டி, திருமாந்துறை (விழுப்புரம்), வாழவந்தான் கோட்டை (தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்), விக்கிராவாண்டி (விழுப்புரம்), திருப்பராய்த்துறை (திருச்சி) உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் நாளை செப்டம்பர் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

வாகனங்களின் தரத்துக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு வழக்கமான நடை முறை தான் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2. சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு
சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, மெட்ரோ ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று ஆய்வு நடத்தினார்.
3. இ-பாஸ் நடைமுறை ரத்து ஆகிறது; தமிழகத்தில் நாளை முதல் பஸ்கள் ஓடும் - புதிய தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் நாளை முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடும் என்றும், இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், வணிக வளாகங்கள், பெரிய கோவில்களை திறக்கலாம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
4. கொரோனா பாதிப்பு எதிரொலி: நாளை முதல் ஒரு வாரம் நவிமும்பை மார்க்கெட் மூடப்படுகிறது
வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாளை முதல் ஒரு வாரம் நவிமும்பை ஏ.பி.எம்.சி. மார்க்கெட் மூடப்படுகிறது. இதனால் மும்பை, நவிமும்பையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
5. ரேஷன் கடைகளில் நாளை முதல் ஒரு நபருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி - கலெக்டர் அறிவிப்பு
ரேஷன் கடைகளில் நாளை முதல் ஒரு நபருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.