தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அமித் ஷா டிஸ்சார்ஜ் + "||" + Home Minister Amit Shah, Hospitalised For Post-Covid Care, Discharged

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அமித் ஷா டிஸ்சார்ஜ்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அமித் ஷா டிஸ்சார்ஜ்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
புதுடெல்லி,

உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு (வயது 55) கடந்த 2-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதில் குணமடைந்த அவர் கடந்த 14-ந்தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 

பின்னர்  உடல் சோர்வு மற்றும் உடல் வலி இருந்ததால்,  கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த 18-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இதன் பலனாக அவர் தற்போது குணமடைந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.  அமித்ஷா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது  பா.ஜனதா தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.’

தொடர்புடைய செய்திகள்

1. உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2. அமித்ஷா, பிரதான் உள்ளிட்டோரை தொடர்ந்து மத்திய ஜலசக்தி மந்திரி ஷெகாவத்துக்கும் கொரோனா - மருத்துவமனையில் அனுமதி
அமித்ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரை தொடர்ந்து மத்திய ஜலசக்தி மந்திரி ஷெகாவத்துக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
3. கேரளாவில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியை அறிந்து மனவேதனை அடைந்தேன் - அமித்ஷா
கேரளாவில் விமான விபத்து செய்தி அறிந்து மன வருத்தம் அடைந்துள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
4. ரபேல் போர் விமானங்கள் எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன் வாய்ந்தவை: அமித்ஷா
ரபேல் போர் விமானங்கள் எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன் வாய்ந்தவை என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
5. 10 ஆயிரம்படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள டெல்லி தற்காலிக ஆஸ்பத்திரியில் அமித்ஷா ஆய்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் மராட்டிய மாநிலத்துக்கு அடுத்தபடியாக தலைநகர் டெல்லி 2வது இடத்தில் உள்ளது.