தேசிய செய்திகள்

நீட் , ஜேஇஇ, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி: மத்திய பிரதேச அரசு + "||" + Madhya Pradesh government to provide free travel for NEET, JEE candidates

நீட் , ஜேஇஇ, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி: மத்திய பிரதேச அரசு

நீட் , ஜேஇஇ,  தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி: மத்திய பிரதேச அரசு
நீட், ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து தரப்படும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
போபால், 

மத்திய பிரதேசத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்ல இலவச போக்குவரத்து வசதி  செய்து கொடுக்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நீட்  தேர்வு வரும்  13 ஆம் தேதி நடைபெற உள்ளது.  நீட் தேர்வுக்குத்  நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதிக்குள் நடைபெறுகிறது. 

கொரோனா கட்டுக்குள் வராததால், இந்த தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று  எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்திய அரசு கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து, பல்வேறு மாநில அரசுகளும் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக கொண்டு வருகின்றன.

மத்திய பிரதேசத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்ல இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர் அல்லது மாணவியருடன் ஒருவர் உடன் வருவதற்கும் அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மாணவர்களுடன் அவர்கள் பெற்றோர் அல்லது உடன் வருபவர்களையும் இலவசமாக தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.