லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் - இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது + "||" + Chinese troops carried out provocative movements to change status quo in eastern Ladakh, thwarted by India: government
லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் - இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது
லடாக் எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
லடாக்,
லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டது.
ஆனால், சீனா இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இரு தரப்புக்கும் இடையே மோதல் கடுமையானதால், பதற்றத்தை தணிக்க ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எல்லைப் பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் பேசித் தீர்க்கவே விரும்புவதாக சீன அரசு கூறுகிறது. ஆனால், எல்லையில் களத்திலோ பிரச்சினையை தீர்க்க சீன ராணுவம் ஒத்துழைக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், லடாக் எல்லையில் நேற்று சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. பாங்காங்க் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். சீன ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது.