தேசிய செய்திகள்

முதுநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு + "||" + Supreme Court allows states to grant benefit of reservation of seats to in-service doctors in NEET Post Graduate degree courses.

முதுநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

முதுநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கிடு அளிக்கும் சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

மலை கிராமங்கள் மற்றும் கிராமப்புறங்களில்  சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில்  தமிழக அரசு சிறப்பு சலுகை வழங்கி வருகிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  மருத்துவ உயர் படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு  மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என  அதிரடியாக தீர்ப்பளித்தது.  

மேலும், இடஒதுக்கீடு வழங்குவதற்கோ ரத்து செய்வதற்கோ இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை எனவும்  முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கிடு அளிக்கும் சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2. மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்- உச்ச நீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
3. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- விஜய் மல்லையா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
4. மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க முடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
5. விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த மதுரை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.