தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- விஜய் மல்லையா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி + "||" + SC dismisses Vijay Mallya's plea seeking review of 2017 verdict holding him guilty for contempt of court

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- விஜய் மல்லையா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- விஜய் மல்லையா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விஜய் மல்லையா இங்கிலாந்தில்  தஞ்சம் அடைந்துள்ளார்.  இவர் கடந்த  2017ல் 'டியாஜியோ' நிறுவனத்திடம் பெற்ற 2.80 கோடி ரூபாயை தன் மகன் சித்தார்த் மற்றும் மகள்கள் தன்யா லீனா ஆகியோருக்கு வழங்கியுள்ளார். 

பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என்ற உச்ச நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்பதால் விஜய் மல்லையா மீது எஸ்.பி.ஐ. தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து 2017-ல் விஜய் மல்லையா சீராய்வு மனு தாக்கல் செய்தார்.  இந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2. மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்- உச்ச நீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
3. முதுநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கிடு அளிக்கும் சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
4. மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க முடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
5. விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த மதுரை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.