மாநில செய்திகள்

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + BJP senior leader Ila Ganesan confirmed corona infection

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி
பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னை,

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. னியார் மருத்துவமனையில் இல.கணேசனுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.