தேசிய செய்திகள்

மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்- உச்ச நீதிமன்றம் + "||" + Prashant Bhushan Fined Re 1 By Supreme Court In Contempt Case

மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்- உச்ச நீதிமன்றம்

மூத்த வழக்கறிஞர்  பிரஷாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்- உச்ச நீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
புதுடெல்லி,

 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாட்டை விமர்சித்து சமூக செயற்பாட்டாளரும் மற்றும் மூத்த வக்கீலுமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார். இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ம் தேதி  உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு மீண்டும் கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி பிரசாந்த் பூஷண் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.  இதனிடையே மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை குறித்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விவரத்தை இன்று வெளியிட்ட உச்ச நீதிமன்றம்,   பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்த அபராத தொகையை செலுத்த வேண்டும் இல்லாவிடில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்  அல்லது  3  வருடம் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வை ஒத்திவைக்கக் கேட்டு புதிய மனு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
நீட்’ தேர்வை ஒத்திவைக்கக் கேட்டு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.
2. நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
3. ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
4. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- விஜய் மல்லையா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
5. முதுநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கிடு அளிக்கும் சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.