மாநில செய்திகள்

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு + "||" + The government has issued guidelines to be followed in places of worship

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு
வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் நாளை முதல் கோயிலில் பக்தர்கள் வழிபட தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்பின்வருமாறு:-

 * தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது.

* முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும்.

* 65வயதுக்கு மேற்பட்டோர், 10வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

* நுழைவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகள்
நாளை முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக பல்வேறு விதிமுறைகளை அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
2. வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை - ஐகோர்ட்டில் வழக்கு தள்ளுபடி
தமிழகத்தில் கோவில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.