தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு + "||" + Supreme Court Refuses to interim order aginst Madras HC

ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம், துப்பாக்கி சூடு போன்றவற்றால் பெரும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆலையை மூடுமாறு தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று கடந்த 18-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு மீது, நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில்  இன்று   விசாரணைக்கு வந்தது.

 அப்போது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேதாந்தா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால்,  இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வை ஒத்திவைக்கக் கேட்டு புதிய மனு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
நீட்’ தேர்வை ஒத்திவைக்கக் கேட்டு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.
2. மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்- உச்ச நீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
3. ஸ்டெர்லைட் நிறுவன வழக்கை இன்று விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று கடந்த 18-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
4. அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்பு
அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் என்ற தீர்ப்புக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
5. நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதில்லை - அட்டர்னி ஜெனரல்
பாபர் மசூதி தொடர்பான கருத்தில் நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதில்லை என அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.