தேசிய செய்திகள்

செப்.30ஆம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை + "||" + International air travel might not be allowed till September 30

செப்.30ஆம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை

செப்.30ஆம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை
செப்.30ஆம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. கொரோனா  கட்டுக்குள் வரவில்லையென்றாலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு நேற்று முன் தினம் வெளியிட்டது. இதில், மெட்ரோ ரெயில் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த நிலையில்,  சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை வரும்  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 மேலும்,  மத்திய அரசு அனுமதித்த வழித் தடங்களில் விமானங்கள் இயக்க தடை இல்லை .  சிறப்பு விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும். சரக்கு போக்குவரத்து சேவை தொடரும். வந்தே பாரத்' திட்டத்திற்கு வெளிநாடுகளுக்கு செல்லும் சேவை தொடரும்  எனவும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 - கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06- கோடியாக உயர்ந்துள்ளது.
2. தோல்வி பயத்தால் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சி
‘நீட்’ தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
3. பாராளுமன்றம் விரைவில் கூட உள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை
பாராளுமன்றம் விரைவில் கூட உள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
4. மூன்றாவது பேட்ஸ்மேனாக தோனி களமிறங்க வேண்டும்'- ரெய்னா விருப்பம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூன்றாம் இடத்தில் தோனி களமிறங்கி விளையாட வேண்டும் என ரெய்னா தெரிவித்துள்ளார்.
5. சானிடசரை பந்தில் ஊற்றி தேய்த்ததாக புகார்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சஸ்பெண்ட்
சானிடசரை பந்தில் ஊற்றி தேய்த்ததாக எழுந்த புகாரையடுத்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.