தேசிய செய்திகள்

தீபாவளிக்கு முன்பாக கொரோனா கட்டுக்குள் வந்துவிடும்: டெல்லி சுகாதாரத்துறை மந்திரி நம்பிக்கை + "||" + We don't need specific support from Centre as long as they don't object to more testing.

தீபாவளிக்கு முன்பாக கொரோனா கட்டுக்குள் வந்துவிடும்: டெல்லி சுகாதாரத்துறை மந்திரி நம்பிக்கை

தீபாவளிக்கு முன்பாக கொரோனா கட்டுக்குள் வந்துவிடும்: டெல்லி சுகாதாரத்துறை மந்திரி நம்பிக்கை
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என டெல்லி சுகாதாரத்துறை மந்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 75 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. இதேவேகத்தில் செல்லும் பட்சத்தில் இன்னும் சில தினங்களில் கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா பிரேசிலை பின்னுக்கு தள்ளி 2- ஆம் இடத்திற்கு சென்றுவிடும். இந்தியாவில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை   36,21,246- ஆக உள்ளது. 

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என்று டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை மந்திரி கூறுகையில், “  கொரோனா தொற்றை கண்டறிய அதிக சோதனை நடத்தப்படுகிறது. 

அதிக சோதனைக்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவிக்காத வரையில் எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து சிறப்பு உதவி எதுவும் தேவையில்லை.  மத்திய அரசிடம் இருந்து சோதனைக் கருவிகள் வாங்குவதற்கு பதிலாக நாங்கள், சந்தைகளில் இருந்து வாங்குகிறோம். மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறியதை போல,  தீபாவளிக்கு முன்பாக கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என நாங்களும் நம்புகிறோம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடியாக உயர்ந்துள்ளது.
2. பிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் பலி
பிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.03 - கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.03 கோடியாக உயர்ந்துள்ளது.
4. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைகிறது-சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தகவல்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 198 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.