கிரிக்கெட்

டோனியுடன் கடும் மோதல்: ஐபிஎல் போட்டியில் இருந்து ரெய்னா விலகியதற்கு காரணம் பரபரப்பு தகவல் + "||" + IPL 2020 In UAE: Suresh Raina In His Own Words - From Son Of Bomb Maker To MS Dhoni's Friend

டோனியுடன் கடும் மோதல்: ஐபிஎல் போட்டியில் இருந்து ரெய்னா விலகியதற்கு காரணம் பரபரப்பு தகவல்

டோனியுடன் கடும் மோதல்:  ஐபிஎல் போட்டியில் இருந்து ரெய்னா விலகியதற்கு காரணம் பரபரப்பு தகவல்
டோனியுடன் ஏற்பட்ட மோதலே ஐபிஎல் போட்டியில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகியதற்கு காரணம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
துபாய்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில், சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா திடீரென்று விலகிய நிலையில், அதற்கு முக்கிய காரணம் டோனியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


ஐ.பி.எல் அணியில் கலந்துகொள்ளும் மற்ற அணிகள் அனைத்தும் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் சென்னையில் ஒருவாரம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த பயிற்சி முடிந்த பின்னரே சென்னை அணி கடந்த 21-ஆம் தேதி துபாய் சென்றது. அங்கு வீரர்கள் ஒரு வார காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அதன் பிறகு 28-ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்த போது, சென்னை அணியில் இருந்து 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதைக் கேட்டு அதிருப்தியடைந்த ரெய்னா, சென்னையில் ஒரு வாரம் தங்கி பயிற்சி மேற்கொண்டது தான் கொரோனா பிரச்சினைக்குக் காரணம்.

சென்னையில் ஏன் கேம்ப் அமைத்தீர்கள் என்று அணிநிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு காசி விஸ்வநாதன், இது டோனியின் முடிவு என்று பதில் கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் வீரர்கள் தனிமைப்படுத்துதலைச் சரியாக மேற்கொள்ளவில்லை என்ற கோபமும் ரெய்னாவுக்கு இருந்துள்ளது.

இதனால் டோனியிடம் சென்ற சுரேஷ் ரெய்னா வீரர்களின் செயல்பாடு குறித்தும், சென்னை கேம்ப் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.இதில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட, இந்த வாக்குவதத்தின் முடிவில் தான் ரெய்னா போட்டி தொடரில் இருந்து விலகில் இந்தியாவுக்கு திரும்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ரெய்னாவின் மாமா படுகொலை செய்யப்பட்டது தான் ரெய்னாவின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்பட்டாலும், அவர் 19-ஆம் தேதி உயிரிழந்துள்ளார். ரெய்னா 21-ஆம் தேதி தான் துபாய் புறப்பட்டுள்ளார். இதனால் இதன் பின்னணியில் இந்த காரணம் தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட அதிருப்தியால் ரெய்னா போட்டி தொடரில் இருந்து விலகியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ரெய்னாவுக்கு  டோனிக்கு வழங்கப்பட்டதை போல பால்கனியுடன் கூடிய அறை வழங்கப்படவில்லை எனவும் இது குறித்து ரெய்னா முறையிட்ட போது, கொரோனா விதிமுறைகளால் உடனடியாக அறையை மாற்ற முடியாது என அணி நிர்வாகம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவுட் லுக் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. டோனியால் ரெய்னாவை சமாதானப்படுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ரெய்னா அச்சம் அடைந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நடுவரின் முடிவை மாற்றும் வகையில் டோனி நடந்து கொண்டாரா?
ஷர்துல் தாகூர் வீசிய பந்து ஒன்று ஆஃப் சைடில் ஓரமாகச் சென்றது. அதை ரஷித் கானால் அடிக்க முடியவில்லை.
2. பஞ்சாப்புக்கு எதிரான வெற்றிக்கு பிறகு டோனி கூறியது என்ன?
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்தாடியது.
3. ரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா? சென்னை அணி சிஇஒ விளக்கம்
ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
4. ஐபிஎல் கிரிக்கெட்; டோனி மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
5. டோனியின் முடிவு வியப்பை தந்தது- சாம் கரண்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேற்று அதிரடியாக விளையாடிய சாம் கரண், ஆட்டத்தின் போக்கை சென்னைக்கு சாதகமாக மாற்றினார்.