மாநில செய்திகள்

சுங்க கட்டணம் உயர்வு விவகாரம்: மக்கள் நிலையை ஆட்சியாளர்கள் என்றுதான் புரிந்து கொள்வார்களோ? கனிமொழி எம்.பி. கேள்வி + "||" + Customs tariff hike: Do people understand the status quo as rulers? Kanimozhi MP Question

சுங்க கட்டணம் உயர்வு விவகாரம்: மக்கள் நிலையை ஆட்சியாளர்கள் என்றுதான் புரிந்து கொள்வார்களோ? கனிமொழி எம்.பி. கேள்வி

சுங்க கட்டணம் உயர்வு விவகாரம்:  மக்கள் நிலையை ஆட்சியாளர்கள் என்றுதான் புரிந்து கொள்வார்களோ? கனிமொழி எம்.பி. கேள்வி
பெருந்தொற்று ஏற்பட்டுள்ள காலத்தில் மக்கள் நிலையை ஆட்சியாளர்கள் என்றுதான் புரிந்து கொள்வார்களோ? என சுங்க கட்டணம் உயர்வை சுட்டி காட்டி தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு வரும் 1ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.  இதன்படி சுங்க சாவடிகளில் நாளை முதல் ரூ.5 முதல் ரூ.10 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என கூறப்படுகிறது.

இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இதுபற்றி தி.மு.க.வை சேர்ந்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, பெருந்தொற்று காலத்தில் நாட்டில் வேலைவாய்ப்பு இழப்பு, பொருளாதார சிக்கல் என்று பல இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர் என சுட்டிக்காட்டி உள்ளார்.

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 
இச்சூழலில் கூட, சுங்க கட்டணத்தை வசூலிக்காமல் இருக்க மனம் இல்லாதவர்கள், விலை ஏற்றத்தையாவது மனிதாபிமானத்தோடு தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், என்று தான் மக்களுடைய சூழ்நிலையை புரிந்து கொள்வார்களோ ஆட்சியாளர்கள்? என்றும் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்தல் தொடர்பாக ஆண்டுதோறும் 10 ஆயிரம் வழக்குகள் வரை தாக்கல்: லஞ்ச ஒழிப்பு துறை தூங்குகிறதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
மணல் கடத்தல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தூங்குகிறதா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியதுடன், மணல் கடத்தல் தொடர்பாக ஆண்டுதோறும் 10 ஆயிரம் வழக்குகள் வரை கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தது.
2. மராட்டியத்தில் உங்கள் அரசு என்னை நடத்தும் விதம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? சோனியா காந்திக்கு கங்கனா ரணாவத் கேள்வி
மராட்டியத்தில் உங்கள் அரசு என்னை நடத்தும் விதம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? என சோனியா காந்திக்கு நடிகை கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
3. கூட்டணிக்கு பா.ஜ.க. தலைமையா? என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதில்
கூட்டணிக்கு பா.ஜ.க. தலைமையா? என்ற கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
4. மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் எப்போது தொடங்கும்? ஐகோர்ட்டு கேள்வி
மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் எப்போது தொடங்கும் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
5. சத்ரபதி சிவாஜி சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் பா.ஜனதா மவுனமாக இருப்பது ஏன்? சிவசேனா கேள்வி
கர்நாடகத்தில் சத்ரபதி சிவாஜி சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் பா.ஜனதா மவுனமாக இருப்பது ஏன்? என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.