மாநில செய்திகள்

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.86.5 லட்சம் நிதியுதவி; காவலர்கள் சார்பில் தென்மண்டல ஐ.ஜி. வழங்கினார் + "||" + Southern IG gives Rs 86.5 lakh financial assistance to the family of a deceased policeman

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.86.5 லட்சம் நிதியுதவி; காவலர்கள் சார்பில் தென்மண்டல ஐ.ஜி. வழங்கினார்

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.86.5 லட்சம் நிதியுதவி; காவலர்கள் சார்பில் தென்மண்டல ஐ.ஜி. வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு தென்மண்டல ஐ.ஜி. முருகன் நிவாரண உதவி வழங்கினார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய துரை முத்து என்ற குற்றவாளியை பிடிக்க சென்றபோது நடத்தப்பட்ட வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் படுகாயமடைந்த காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு தென்மண்டல ஐ.ஜி. முருகன் இன்று நிவாரண உதவி வழங்கினார்.  10 மாவட்டங்களில் உள்ள காவலர்களிடமிருந்து திரட்டப்பட்ட 86 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி. முருகன், சுப்பிரமணியன் குடும்பத்திற்கு மாதம் 42 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு உலர் உணவு பொருட்கள் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்
கிருஷ்ணகிரியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று கால நிவாரணமாக அரிசி, பருப்பு மற்றும் முட்டை உள்ளிட்ட உலர் உணவு பொருட்களை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
2. குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்
மாவட்டத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.
3. கோவில்பட்டி யூனியனில் 20 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனம் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
கோவில்பட்டி யூனியனில் 20 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனங்களை, அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
4. காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.331 கோடி நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.331 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
5. காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.331 கோடி நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர் வழங்கினார்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.331 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.