தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona impact for 3 MLAs in Rajasthan

ராஜஸ்தானில் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு

ராஜஸ்தானில் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு
ராஜஸ்தானில் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசில் முதல் மந்திரி அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று வெற்றியடைந்தது.  இதனால், ஆட்சி கவிழ்வதில் இருந்து அசோக் கெலாட்டின் அரசு தப்பியது.

இந்நிலையில், ராஜஸ்தானில் பொதுமக்கள் தவிர்த்து மக்கள் பிரதிநிதிகளும் கொரோனா வைரசால் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.  அந்த மாநிலத்தின் போக்குவரத்து மந்திரி பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் கொரோனா பாதிப்புக்கு ஆளானது நேற்று உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ. உள்பட 3 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் மீனா மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களான ஹமீர் சிங் பாயல் மற்றும் சந்திரபான் சிங் ஆக்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

அவர்கள் அனைவரும் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என முதல் மந்திரி அசோக் கெலாட் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்ந்துள்ளது.
2. தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.12 - கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சமாக உயர்ந்துள்ளது.
4. கர்நாடக துணை முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக துணை முதல் மந்திரி அஷ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மாணவனை தெரிந்தே பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தே தங்களது மகனை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.