தேசிய செய்திகள்

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுடனான மோதலில் 35 சீன வீரர்கள் பலி உறுதியானது + "||" + Galwan Valley: Pictures of graves of around 35 Chinese soldiers killed in clash with Indian Army surface

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுடனான மோதலில் 35 சீன வீரர்கள் பலி உறுதியானது

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுடனான மோதலில் 35 சீன வீரர்கள் பலி உறுதியானது
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுடனான மோதலில் 35 சீன வீரர்கள் பலியானார்கள் என்பது குறித்த தகவல்கள் உறுதியானது
புதுடெல்லி

லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை


கால்வான் பள்ளத்தாக்கில் மோதல்  ஏற்பட்டு நாற்பத்தேழு நாட்களுக்குப் பிறகு, சீன இராணுவ வீரர்கள்  (பி.எல்.ஏ) உயிரிழந்ததற்கான ஆதாரம் இறுதியாக வெளிவந்துள்ளது. இந்த மோதலில் கொல்லப்பட்ட சீன வீரர்களின் கல்லறைகளின் படங்கள் சீன சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சீனாவின் பக்கத்தில் 35 பேர் உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் இந்தியாவில் ஏற்கனவே இருந்தன, ஆனால் இந்த படங்கள் இப்போது 35 க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை நிரூபிக்கின்றன.

மாண்டரின் மொழியில் உள்ள கல்லறைகளில் ஒன்றின் கல்வெட்டு கூறுகிறது, "சென் சியாங்ரோவின் கல்லறை. 69316 துருப்புக்களின் சிப்பாய், பிங்னான், புஜியான். அவர் 2020 ஜூன் மாதம் இந்தியாவின் எல்லைப் படையினருக்கு எதிரான போராட்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தார், மேலும் மத்திய இராணுவ ஆணையத்தால் மரணத்திற்குப் பின் நினைவு கூரப்பட்டார்.சிப்பாய் டிசம்பர் 2001 இல் பிறந்தார், வெறும் 19 வயதுதான் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளத

மோதலில் உயிரிழந்த சீனா வீரர்களுக்கு அந்த நாடு ஒரு பொது இறுதி சடங்கை நடத்த வில்லை மேலும் மோதலில் மரணம் அடைந்தவர்கள் குறித்த செய்தியை வெளியிடக்கூடாது என தடைவிதித்து இருந்தது. 

பாங்காங்க் த்சோ பட்டாலியனின் முன்னாள் கட்டளை அதிகாரி  ஒருவர் கூறும் போது  :

இந்திய இராணுவம் மனிதர்களுக்கு எதிராக போராடியது, ரோபோக்களுக்கு எதிராக அல்ல. அதே மைதானத்திலேயே இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் ரோந்து புள்ளி 15 இல் ஆரம்ப படைகள் விலகி கொண்டாலும் பாங்கோங் ஏரி மற்றும் ரோந்து புள்ளி 17 ஏ என அழைக்கப்படும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து செல்ல சீனா தயக்கம் காட்டுகிறது.

லடாக் எல்லையில் நேற்று சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.  பாங்காங்க் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். சீன ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் 500 சீன ராணுவ வீரர்கள் ஊடுருவல் ; சீன ராணுவம் மறுப்பு
கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் 500 சீன ராணுவ வீரர்கள் ஊடுருவினர் இதனை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இதனை சீன ராணுவம் மறுத்து உள்ளது.
2. கல்வான் பள்ளத்தாக்கு மோதல்:பலியான சீன சிப்பாயின் கல்லறை படம் வைரலானது
கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் ஈடுபட்டு பலியான சீன சிப்பாயின் கல்லறையின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
3. கல்வான் பள்ளத்தாக்கை தொடர்ந்து பங்கோங் சோ பகுதியில் இருந்தும் சீன படைகள் விலகல்
கல்வான் பள்ளத்தாக்கை தொடர்ந்து பங்கோங் சோ பகுதியில் இருந்தும் சீன படைகள் வெளியேறி வருகின்றன.
4. கல்வான் பள்ளத்தாக்குக்கு சீனா சொந்தம் கொண்டாடுவதை இந்தியா மீண்டும் நிராகரித்தது
கல்வான் பள்ளத்தாக்குக்கு சீனா சொந்தம் கொண்டாடுவதை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது.
5. கல்வான் பள்ளத்தாக்கை இந்தியா இழக்கிறதா? - பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
கல்வான் பள்ளத்தாக்கை இந்தியா இழக்கிறதா என பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.