தேசிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு; நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு + "||" + Death of former President Pranab Mukherjee; 7 days of mourning to be observed across the country

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு; நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு; நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும்:  மத்திய அரசு அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனா பாதிப்புக்காக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலமானார்.  அவருக்கு வயது 84.  கடந்த 9ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்த அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆபரேஷன் செய்து அகற்றப்பட்டது.  ஆனால் அதன்பின் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

எனவே வென்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.  ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் ஷாக் ஏற்பட்டு உடல் நிலை கடும் பின்னடைவு அடைந்து இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்தது. ஆழ்ந்த கோமா நிலையிலேயே இருந்த பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையை மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வந்தது.

இவற்றுக்கிடையே கொரோனா பாதிப்புக்கும் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காலமானார்.  இதனை அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி உள்ளார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  இதேபோன்று, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அவரது மறைவுக்கு எனது வருத்தத்தினை தெரிவித்து கொள்கிறேன்.  புத்தி நுட்பமுள்ள அரசியல்வாதி மற்றும் அதிக அறிவு படைத்த மனிதர்.  அவர் தனது தொழில் முறை வாழ்க்கையில் இருந்து தனிப்பட்ட வாழ்க்கையை பிரித்து பார்க்க தெரிந்தவர்.  அனுபவம் நிறைந்த நிர்வாகி அவர் என தெரிவித்து உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதன்படி, ஆகஸ்டு 31ந்தேதி (இன்று) முதல் செப்டம்பர் 6ந்தேதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு; மத்திய ரெயில்வே மந்திரி அறிவிப்பு
தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மக்களவையில் அறிவித்து உள்ளார்.
2. டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும்; மாநில கல்வி இயக்குனரகம் அறிவிப்பு
டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
3. பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமைகளுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
4. விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை; சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு
விமானத்துக்குள் புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
5. தேதி மாற்றம்: ஜனவரி 20-ந்தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு; தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தமிழகத்தில் ஜனவரி 15-ந்தேதிக்குப் பதிலாக, 20-ந்தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.