மாநில செய்திகள்

பிரணாப் முகர்ஜி மறைவு: சாதுர்யம் மிக்க அனுபவ சக்ரவர்த்தி ஒருவரை நாடு இழந்திருக்கிறது - மு.க.ஸ்டாலின் இரங்கல் + "||" + I am shocked to hear the sad news that Pranab Mukherjee has passed away due to ill health M. K. Stalin

பிரணாப் முகர்ஜி மறைவு: சாதுர்யம் மிக்க அனுபவ சக்ரவர்த்தி ஒருவரை நாடு இழந்திருக்கிறது - மு.க.ஸ்டாலின் இரங்கல்

பிரணாப் முகர்ஜி மறைவு: சாதுர்யம் மிக்க அனுபவ சக்ரவர்த்தி ஒருவரை நாடு இழந்திருக்கிறது - மு.க.ஸ்டாலின் இரங்கல்
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர், 'பாரத ரத்னா' பிரணாப் முகர்ஜி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன்.  இந்த வேதனை மிகுந்த மறைவுச் செய்தி என் அடிமனதை உலுக்கி எடுக்கிறது.


அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல். திமுகவுடன், கலைஞர் அவர்களுடனும்  நீண்டகாலத் தொடர்பு கொண்ட அவர், கழகத்தின் மாநில சுயாட்சிக் கருத்தரங்கில் பங்கேற்று மாநில உரிமைகளுக்கு மதிப்பளித்து உரையாற்றியவர்.

மதச்சார்பின்மை - ஜனநாயகம் ஆகியவற்றின் அசைக்க முடியாத பாதுகாவலராக விளங்கிய நாடு போற்றும் தலைவரின் மறைவு - அந்தக் கொள்கைகளுக்காகப் போராடி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் இந்த நேரத்தில் பேரிழப்பு

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் - காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு; முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் இரங்கல்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
2. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி இரங்கல்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.