மாநில செய்திகள்

லண்டனில் ஜான் பென்னிகுவிக் கல்லறையை மர்மநபர்கள் சேதப்படுத்திய செயல் கண்டிக்கத்தக்கது - பன்னீர்செல்வம் + "||" + The act of mystical damage to the tomb of John Pennyquick is reprehensible

லண்டனில் ஜான் பென்னிகுவிக் கல்லறையை மர்மநபர்கள் சேதப்படுத்திய செயல் கண்டிக்கத்தக்கது - பன்னீர்செல்வம்

லண்டனில் ஜான் பென்னிகுவிக் கல்லறையை மர்மநபர்கள் சேதப்படுத்திய செயல் கண்டிக்கத்தக்கது - பன்னீர்செல்வம்
லண்டனில் ஜான் பென்னிகுவிக் கல்லறையை மர்மநபர்கள் சேதப்படுத்திய செயல் கண்டிக்கத்தக்கது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். இவர் தனது சொத்துக்கள் முழுவதையும் இந்த அணையை கட்டுவதற்காக செலவழித்தார்.


இதனால் 5 மாவட்ட விவசாயிகள் இவரை கடவுளாக வழிபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்றும் கூட பல வீடுகளில் தங்களது குழந்தைகளுக்கு பென்னிகுவிக் பெயரை வைத்து அழைத்து வருகின்றனர்.

இவருக்கு தமிழக அரசு சார்பில் தேனி மாவட்டம் கூடலூரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு ஆள் உயர முழு வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது. இவரது பிறந்த தினமான ஜனவரி 15-ந் தேதி தேனி மாவட்டம் முழுவதும் பொங்கல் வைத்து பென்னி குவிக்கிற்கு பொதுமக்கள் விழா எடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தென் மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பென்னிகுவிக் கடந்த 11.3.1913-ம் தேதி அவரது சொந்த ஊரான லண்டனில் உயிரிழந்தார். அவருக்கு லண்டன் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் தேவாலயத்தில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லறையை லண்டன் வாழ் தமிழ் மக்கள் அடிக்கடி பார்வையிட்டு அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த கல்லறையின் மீது அமைக்கப்பட்டு இருந்த சிலுவை வடிவிலான பாறை இடித்து அகற்றப்பட்டு இருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்மந்தப்பட்ட தேவாலயத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி, கல்லறையை சேதப்படுத்தியவர்களை லண்டன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில்,  லண்டனில் ஜான் பென்னிகுவிக் கல்லறையை மர்மநபர்கள் சேதப்படுத்திய செயல் கண்டிக்கத்தக்கது  என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழர்கள் என்றும் நன்றியோடு நினைவுகூர்ந்து போற்றும் ஜான் பென்னிகுவிக் அவர்களின் கல்லறையை லண்டனில் மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ள செயலை வன்மையாக கண்டிக்கிறேன். தன்னலமின்றி தனது குடும்பச் சொத்துகளை விற்று முல்லைப் பெரியாறு அணைகட்டி தேனி மாவட்டம் உட்பட தென்தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் ஜான் பென்னிகுவிக் அவர்கள் என பதிவிட்டுள்ளார்.