மாநில செய்திகள்

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு துக்கம் முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணங்கள் ரத்து + "||" + Mourning for Pranab Mukherjee's death First-minister's tours canceled

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு துக்கம் முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணங்கள் ரத்து

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு துக்கம் முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணங்கள் ரத்து
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு துக்கம் கடைப்பிக்கும் நிலையில் முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், நாளை (புதன்கிழமை) திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த ஆய்வை மேற்கொண்டு, அந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தார்.


இதேபோல், 4-ந்தேதி விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் சுற்றுப்பணம் செய்து, அந்த 2 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் எந்த வகையில் மேற்கொள்ளப்படுகிறது? என்று விரிவாக ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி, 7 நாட்கள் துக்கம் கடைப்பிக்கும் நிலையில், இந்த வார சுற்றுப்பயணங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்துசெய்துவிட்டார். அதுபோல, அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த நிகழ்ச்சிகள், சுற்றுப்பயணங்கள் எல்லாம் இந்த 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்ட பிறகு, மற்றொரு நாட்களில் நடத்தப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.