மாநில செய்திகள்

இங்கிலாந்தில் பென்னி குயிக் கல்லறை சேதம் வைகோ கண்டனம் + "||" + vaiko condemns Penny Quick grave damage in the UK

இங்கிலாந்தில் பென்னி குயிக் கல்லறை சேதம் வைகோ கண்டனம்

இங்கிலாந்தில் பென்னி குயிக் கல்லறை சேதம் வைகோ கண்டனம்
இங்கிலாந்தில் பென்னி குயிக் கல்லறை சேதம் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இங்கிலாந்தைச் சேர்ந்த கர்னல் ஜான் பென்னி குயிக், தென் மாவட்ட மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் உதவும் வகையில் முல்லைப்பெரியாறு அணையை கட்டி, தமிழக மக்கள் மனதில் போற்றத்தக்க இடத்தை பெற்றவர்.


லண்டனிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரிம்லின் என்னும் ஊரில் உள்ள அவரது கல்லறை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.