மாநில செய்திகள்

“அமைச்சர்கள் எல்லை மீறி பேசுகிறார்கள்” எச்.ராஜா பேட்டி + "||" + "Ministers are talking out of bounds" H. Raja

“அமைச்சர்கள் எல்லை மீறி பேசுகிறார்கள்” எச்.ராஜா பேட்டி

“அமைச்சர்கள் எல்லை மீறி பேசுகிறார்கள்” எச்.ராஜா பேட்டி
“அமைச்சர்கள் எல்லை மீறி பேசுகிறார்கள்” என்று எச்.ராஜா கூறினார்.
மதுரை,

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதிபதி சந்துரு தனது முகநூல் பக்கத்தில் மத்திய நிதி மந்திரியை அவதூறாக விமர்சனம் செய்துள்ளார். இது வருந்தத்தக்க விஷயம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.


அமைச்சர் செல்லூர் ராஜூ நல்ல நண்பர். ஆனால் தற்போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஜெயக்குமாரும் கூட்டணி பற்றி பேசுவது சரியல்ல. அவர்கள் பேச வேண்டாம். அரசு அதிகாரிகள் தவறு செய்தால் சுட்டிக்காட்டுவது என் பொறுப்பு. தமிழக அரசை நான் விமர்சிப்பது கிடையாது. தோழமை உணர்வோடு குறைகளை சொன்னால் பரிகாரம் செய்ய வேண்டும். அமைச்சர்கள் சிலர் எல்லை மீறி பேசுகிறார்கள். இது கூட்டணிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

6 ஆண்டுகள் பிரதமர் மோடி செயல்படுத்திய திட்டங்களால் ஏராளமான மக்கள் பயன் பெற்றுள்ளனர். பயனாளிகளை வாக்காளர்களாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. பா.ஜ.க. இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையை கொண்டு வருவது போல தமிழகத்தில் தேர்தல் தயாரிப்புகள் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டு எதிர்ப்பது வேடிக்கையானது - எச்.ராஜா பேச்சு
நீட் தேர்வை தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசு இருக்கும் போது கொண்டு வந்து விட்டு தற்போது அதை எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.
2. விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் எச்.ராஜா வலியுறுத்தல்
விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார்.
3. “பா.ஜ.க. டெல்லிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் ராஜாதான்” எச்.ராஜா சொல்கிறார்
“பா.ஜ.க. டெல்லிக்கு மட்டும் ராஜா அல்ல. தமிழகத்திலும் ராஜாதான்” என்று மதுரையில் அளித்த பேட்டியில் எச்.ராஜா கூறினார். பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
4. எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்துள்ளனர்.
5. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது ; எச்.ராஜா உறுதி
மின்துறையை தனியார்மயமாக்குவதன் மூலம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது. அதை மத்திய அரசு அனுமதிக்காது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.