தேசிய செய்திகள்

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கொரோனாவில் இருந்து மீண்டார் + "||" + DK Shivakumar Discharged From Hospital After Recovering From COVID-19

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கொரோனாவில் இருந்து மீண்டார்

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கொரோனாவில் இருந்து மீண்டார்
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருபவர் டி.கே.சிவக்குமார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட டி.கே.சிவக்குமாருக்கு கடந்த 24-ந் தேதி கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதையடுத்து அவர் ராஜாஜிநகரில் உள்ள சுகுணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இதனால் அவருக்கு கொரோனா தொற்று குறைந்தது.

இதையடுத்து அவருக்கு 2-வது கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் நேற்று முன்தினம் 3-வது முறையாக டி.கே.சிவக்குமாருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதிலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியானது. இதனால் அவர் கொரோனாவில் இருந்து மீண்டது உறுதியானது. 

இந்த நிலையில் நேற்று சுகுணா மருத்துவமனையில் இருந்து 7 நாட்களுக்கு பிறகு டி.கே.சிவக்குமார் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். இருப்பினும் அவரை வீட்டு தனிமையில் சில நாட்கள் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.