உலக செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்து: உலக சுகாதார அமைப்பு + "||" + Opening Up Without Control Of COVID-19 Is "Recipe For Disaster", Says WHO

கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்து: உலக சுகாதார அமைப்பு

கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்து: உலக சுகாதார அமைப்பு
கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவா, 

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் முதன் முதலில் வெளிப்பட்டு ஏறத்தாழ 9 மாதங்கள் ஆகியுள்ள போதிலும், வைரஸ் தொற்று பரவல் பல நாடுகளில்  இன்னும்  உச்சகட்டமாக உள்ளது. 

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வந்த  நாடுகள், பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு தளர்வுகளை அறிவித்து திறந்து விட்டன. இந்தியாவிலும் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாமல் கட்டுப்பாடுகளை தளர்த்தி திறந்து விடுவது பேரழிவிற்கான செயல் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் ஆதனோம் கேப்ரியேசுஸ் கூறுகையில்,

“ பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக எந்த நாடும் சொல்ல முடியாது. உண்மை என்னவெனில் இந்த வைரஸ் மிக எளிதாக பரவும். எனவே, கொரோனாவை கட்டுப்படுத்தாமல், திறந்து விடுவது என்பது பேரழிவிற்கான செயலாகும்.  மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் இருந்தே  பெரிய அளவில் தொற்று பரவல் ஏற்படுகிறது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. கண்ணாடி அணிந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு-விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2. ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாக ‘மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும்’-காங்கிரஸ் ஆவேசம்
ஊரடங்கை அறிவிப்பதற்கு முன் மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ் ஆவேசமாக கூறியது.
3. அசாமில் மேலும் 2,394- பேருக்கு கொரோனா தொற்று
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,394-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று
மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 324 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 324 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.