தேசிய செய்திகள்

மாணவர்களின் நலனுக்காக நாம் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும் - மத்திய மந்திரி ரமேஷ் போக்ரியால் + "||" + For the benefit of students We must all work together By Union Minister Ramesh Pokriyal

மாணவர்களின் நலனுக்காக நாம் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும் - மத்திய மந்திரி ரமேஷ் போக்ரியால்

மாணவர்களின் நலனுக்காக நாம் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும் - மத்திய மந்திரி ரமேஷ் போக்ரியால்
மாணவர்களின் நலனுக்காக நாம் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும் என்று மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இது குறித்து மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:- 

கொரோனா அச்சுறுத்தல் உள்ள இந்த நெருக்கடியான சூழலில் மாணவர்களுக்கு ஆதரவளிக்கவும் , அவர்களின் எதிர்காலத்திற்காக நம் அனைவரின் கூட்டு முயற்சி தேவை. மாணவர்கள் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வின் போது எந்த விதமான சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடாது. மாணவர்களின் நலனுக்காக நாம் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும்

நேற்று மாலை 6 மணி  நிலவரப்படி ஜே.இ.இ.யில் 8 புள்ளி 58 லட்சம் பேரில் சுமார் 7 லட்சத்து 77 ஆயிரம் பேர் தேர்வு அனுமதி அட்டைகள் பதிவிறக்கம் செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த 15 புள்ளி 97 லட்சம் பேரில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு அட்டைகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். 

மேலும் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில முதல்வர்கள் செய்யமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் வீடியோவில் கூறியுள்ளார்.