உலக செய்திகள்

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவுடன் பிரச்சினை ஏற்படுவது ஏன் ? சீன வெளியுறவுத்துறை மந்திரி + "||" + There have been problems as boundary between China, India is not demarcated: Chinese foreign minister

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவுடன் பிரச்சினை ஏற்படுவது ஏன் ? சீன வெளியுறவுத்துறை மந்திரி

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவுடன் பிரச்சினை  ஏற்படுவது ஏன் ? சீன வெளியுறவுத்துறை மந்திரி
பங்கோங் சோ ஏரியின் வட கரை பகுதியில் ஏற்கனவே பிரச்சினை இருந்து வரும் நிலையில், ஏரியின் தென்கரை பகுதியில் கடந்த 29-ந்தேதி இரவு சீன வீரர்கள் திடீரென்று அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்டனர்
டோக்கியோ,

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி அத்துமீற முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது ஏற்பட்ட மோதலில் சீன தரப்பில் 35 பேர் பலி ஆனார்கள். இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, எல்லையில் பதற்றத்தை தணிக்க தூதரக ரீதியிலும், ராணுவ மட்டத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது, முன்பு இருந்த நிலைக்கு படைகளை வாபஸ் பெற சீனா ஒப்புக்கொண்டதை தொடர்ந்து எல்லையில் ஓரளவு பதற்றம் தணிந்தது.

கல்வான் பள்ளத்தாக்கில் பங்கோங் சோ ஏரியின் வட கரை பகுதியில் ஏற்கனவே பிரச்சினை இருந்து வரும் நிலையில், ஏரியின் தென்கரை பகுதியில் கடந்த 29-ந்தேதி இரவு சீன வீரர்கள் திடீரென்று அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்டனர். ஏற்கனவே உள்ள நிலைப்பாட்டை மீறும் வகையில் அவர்கள் அத்துமீற முயன்றனர். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- “ கிழக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா - சீனா இடையே பிரச்சினை உள்ளது. இரு நாடுகளும் இடையேயான எல்லை இன்னும் வரையறுக்கப்படவில்லை என்பதன் காரணமாகவே பிரச்சினை ஏற்படுகிறது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,01,468 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
2. இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்தில் பலரும் பாதுகாப்பின்றி கூடியதும் ஒரு காரணமாகும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86,961 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. லடாக் மோதல் விவகாரம்: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை
எல்லைப் பிரச்சினை குறித்து இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 12 லட்சம் கொரோனா பரிசோதனை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.