மாநில செய்திகள்

வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் + "||" + Heavy showers in Sivagangai, Ramanathapuram and Virudhunagar districts due to heat wave - Meteorological Department

வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தென் தமிழகத்தில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த வாரத்தில் தமிழகத்தில் ஓரளவுக்கு மழை பெய்தது. இந்த நிலையில் வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழகத்தில் நிலவும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது 

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
2. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் எதிரொலித்த சத்தம்: ஹெலிகாப்டர் விழுந்ததாக பரபரப்பு அதிகாரிகள் விளக்கம்
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் எதிரொலித்த பயங்கர சத்தத்தால் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
3. கொரோனா இல்லாத மாவட்டமான சிவகங்கை: விரைவில் பச்சை மண்டலமாக வாய்ப்பு
சிவகங்கை மாவட்டத்தில் கடைசி கொரோனா நோயாளியும் குணம் அடைந்து வீடு திரும்பியதால், கொரோனா இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது. விரைவில் அந்த மாவட்டம் பச்சை மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.
4. மதுரை, விருதுநகர், சிவகங்கையில் என்ஜினீயர், கல்லூரி மாணவி உள்பட 5 பேருக்கு கொரோனா உறுதி
மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் என்ஜினீயர், கல்லூரி மாணவி உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
5. கொரோனா ஊரடங்கு உத்தரவால் சிவகங்கை மாவட்டத்தில் விவசாய பணிகள் பாதிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் விவசாய பணிக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை. எனவே சிவகங்கை மாவட்டத்தில் தற்போது விவசாய பணிகள் முற்றிலும் முடங்கிய நிலையில் உள்ளது.