தேசிய செய்திகள்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது + "||" + Delhi: Mortal remains of former President #PranabMukherjee brought to Lodhi Crematorium. His last rites are being performed.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில் கட்டியை அகற்ற ஆபரேஷன் செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது. இதற்கிடையே, டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இன்று காலை டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள பிரணாப் முகர்ஜி இல்லத்தில், அவரது புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து,  பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக அவரது உடல், ராணுவ வாகனத்திற்கு பதிலாக வேனில் எடுத்துச் செல்லப்பட்டது.  டெல்லி லோதி பகுதியில் அவரது உடல்  ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காலமானார்.
2. பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார் - ராணுவ மருத்துவமனை
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார் என ராணுவ மருத்துவமனை கூறி உள்ளது
3. எனது தந்தை பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது - மகன் அபிஜித் முகர்ஜி
தனது தந்தை பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
4. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம்: டாக்டர்கள் தீவிர சிகிச்சை
பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியுள்ளது.
5. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குணம் அடைய பிரார்த்திக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி ‘டுவிட்டர்’ பதிவு
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குணம் அடைய பிரார்த்திக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.