உலக செய்திகள்

சீனாவுடன் மோதலை விரும்பினால் இந்தியா கடுமையான இழப்புகளை சந்திக்கும்- குளோபல் டைம்ஸ் மிரட்டல் + "||" + If you want a confrontation with China India will face severe losses Global Times Intimidation

சீனாவுடன் மோதலை விரும்பினால் இந்தியா கடுமையான இழப்புகளை சந்திக்கும்- குளோபல் டைம்ஸ் மிரட்டல்

சீனாவுடன் மோதலை விரும்பினால் இந்தியா கடுமையான இழப்புகளை சந்திக்கும்- குளோபல் டைம்ஸ் மிரட்டல்
தங்களுடன் ராணுவ விரும்பினால் கடந்த காலங்களை விட இந்தியாவை ‘கடுமையான’ இராணுவ இழப்புகளுக்கு ஆளாக்க சீனாவால் முடியும் என சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.
பீஜிங்

அணு ஆயுத நாடுகளான இந்தியா-சீனா இடையே ஒரு புதிய எல்லை பிரச்சினை வெடித்த பின்னர் சீன ஊடகம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு இமயமலையில் சர்ச்சைக்குரிய எல்லையில் இந்திய பகுதியை ஆக்கிரமிக்க சீன படைகள் மேற்கொண்ட முயற்சியை இந்தியப் படைகள் முறியடித்ததாக இந்திய அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.அதே நாளில், இந்தியா படைகள் சட்டவிரோதமாக பகிரப்பட்ட எல்லையை தாண்டிவிட்டது, இந்திய இராணுவம் உடனே படைகளை திரும்பப் பெறுமாறு சீனாவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் கோரினார்.

சீன எல்லைப் படைகள் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கவில்லை என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா போட்டியில் ஈடுபட விரும்பினால், இந்தியாவை விட சீனாவிடம் அதிகமான கருவிகள் மற்றும் திறன்கள் உள்ளன.

இந்தியா இராணுவ மோதலை விரும்பினால், சீன இராணுவம் 1962-ல் செய்ததை விட இந்திய இராணுவம் மிகவும் கடுமையான இழப்புகளை சந்திக்க வைக்கும் என சீன ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பதற்றங்களுக்கு மத்தியிலும் 3 ஆண்டுகளாக எல்லை பகுதியில் ராணுவ பலத்தை அதிகரித்து வரும் சீனா - அதிர்ச்சி தகவல்
பதற்றங்களுக்கு மத்தியிலும் 3 ஆண்டுகளாக எல்லை பகுதியில் சீனா தனது விமான தளங்கள், வான் பாதுகாப்பு மற்றும் ஹெலிபோர்ட்களை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
2. இந்தியா முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,01,468 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
3. லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள்
லடாக்கின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள 6 புதிய சிகரங்களை இந்திய ராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
4. இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்தில் பலரும் பாதுகாப்பின்றி கூடியதும் ஒரு காரணமாகும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86,961 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.